2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இரணைப்பாலை கடற்றொழிலாளர்களுக்கு அனுமதி

Niroshini   / 2021 மே 30 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை மீனவர்களுக்கு, இன்று (30) முதல், கடற்றொழிலுக்குச் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இரணைப்பாலையில் இருந்து மாத்தளன் கடலில் தொழில் செய்வதற்கு மாவட்டச் செயலாளரால் 48 கடற்றொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில், இரணைப்பாலையில் இருந்து கடற்றொழிலாளர்கள் தொழிலுக்குச் செல்லும் போது, மாத்தளன் சந்தியில் வைத்து கடலுக்குச் செல்ல வேண்டாம் என திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதையடுத்து, தடைகளை ஏற்படுத்தியவர்களுடன் இப்பகுதி கடற்றொழிலாளர் சங்கங்கள் நடத்திய கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, இரணைப்பாலையில் இருந்து கடலுக்கு செல்லலாம் என்று, இன்று (30) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பயணக் கட்டுப்பாடுகள் ஏற்பட்டிருந்தாலும் கடற்றொழிலாளர்கள் கடலில் சென்று மீன்பிடிக்கலாம் என்ற நடைமுறை உள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .