2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இரணைமடுக்கு அருகில் ’அம்மாச்சி’ வந்தது

Editorial   / 2019 டிசெம்பர் 29 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - இரணைமடு குளத்துக்கு அண்மையில் நிர்மாணிக்கப்பட்ட அம்மாச்சி உணவகக் கட்டடம், அமைச்சர் டக்கஸ் தேவானந்தாவால், இன்று (29) திறந்து வைக்கப்பட்டது.

உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டிலும் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் நிதி பங்களிப்பிலுமென, சுமார் 56 இலட்சத்து 68 ஆயிரம் ரூபாய் செலவில் குறித்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

குறித்த அம்மாச்சி உணவகத்தின் ஊடாக பாரம்பரிய மற்றம் இயற்கையான உணவுகளை உற்பத்தி செய்து, குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவதற்காகவும் சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்குடனும் குறித்த பகுதியில் அம்மாச்சி உணவகம் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிக​ழ்வில், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் வை.தவநாதன், கிளிநொச்சி மாவட்ட மேலதிகச் செயலாளர் எஸ் சத்தியசீலன், கரைச்சி பிரதேச செயலாளர் டி.முகுந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X