2025 ஒக்டோபர் 10, வெள்ளிக்கிழமை

இராமர் பாலத்தை பார்வையிட விசேட படகு சேவை

Freelancer   / 2025 ஒக்டோபர் 09 , பி.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலைமன்னார் கடற்பரப்பில் அமைந்துள்ள இராமர் பாலத்தைப் பார்வையிடச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசேட படகு சேவையை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேச மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய குறித்த தீர்மானம் பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களின் போது எடுக்கப்பட்டுள்ளதுடன், படகு சேவைக்கான கட்டண அறவீட்டை வன ஜீவராசிகள் திணைக்களத்தினூடாக முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

இதில் கட்டண அறவீடு குறித்து, வன ஜீவராசிகள் திணைக்களம் மற்றும் மன்னார் பிரதேசசபை உறுப்பினர்களிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X