2025 ஜூலை 14, திங்கட்கிழமை

’இராஜதந்திர சந்தர்ப்பங்களை தவறக்கூடாது’

சண்முகம் தவசீலன்   / 2017 செப்டெம்பர் 17 , பி.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

 “தமிழ் மக்களுக்கு, நல்லாட்சி அரசாங்கத்தில் கிடைக்கப்பெற்றுள்ள இராஜதந்திர சந்தர்ப்பங்களை இழந்துவிடக்கூடாது” என, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, நேற்று (16) தெரிவித்தார்.

மேலும், “இன்று இருக்கக்கூடிய நல்ல சூழலை, நாம் நிராகரித்தால் தமிழ் மக்கள் நிராகரிக்கப்படும் சந்தர்ப்பம் உருவாகும்” எனவும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு - முள்ளியவளையில் சிறந்த சமூக சேவையாளர் விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, இங்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கருத்துத் தெரிவிக்கையில்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கத்துக்கு முண்டுகொடுக்கும் செயற்பாட்டில் இருந்து மீளவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலட்சியத்துக்காகவே உருவாக்கப்பட்டது. மாறாக, கட்சியை அல்லது தனிநபர்களை வளப்படுத்துவதற்காக உருவாக்கப்பெறவில்லை” என்றார்.

மேலும், மக்கள் போராட்டங்களுக்கு கூட, ஒற்றுமையாக தலைமைத்துவத்தை கொடுக்க முடியாது, தாம் வெட்கி தலைகுனிந்து நிற்பதாகவும், நல்லாட்சி அரசாங்கம் மக்களின் வாக்குகளைப் பெற்று, இராஜதந்திரமாக மக்களை ஏமாற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .