2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இராணுவ அதிகாரி உயிரிழந்த இடத்தில் அஞ்சலி

சண்முகம் தவசீலன்   / 2019 பெப்ரவரி 25 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் காட்டுப் பகுதிக்குள் ஊடுருவிய சமயத்தில், விடுதலைப்புலிகளின் முறியடிப்பு அணிகளின் தாக்குதலில் உயிரிழந்த இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணி தளபதியான லெப்.கேணல் லலித் ஜெயசிங்கவின் நினைவாக நேற்று முன்தினம் (23) முல்லைத்தீவில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் காட்டு பகுதியில் லலித் ஜெயசிங்க உயிரிழந்த இடத்தில் அவரது மனைவி மகள் பெற்றோரால் மரக்கன்றுகள் நடப்பட்டன. அடர்ந்த காட்டுக்குள் ஜி.பி.எஸ் துணையுடன் சுமார் 2.7 கிலோமீற்றர் தூரம் நடந்து சென்றே அவர் கொல்லப்பட்ட இடத்தை இந்த குழு அடைந்தது

மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் 4 வது புலனாய்வு படையணி என்பவனவற்றின் வழிகாட்டலில் ஜெயசிங்கவின் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .