2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

Niroshini   / 2021 ஓகஸ்ட் 05 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - விளாவோடை வயல் பகுதியில் இருந்து,இன்று (05), இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் சில அடையாளம் காணப்பட்டுள்ளன.

குறித்த வயல் காணியை சீரமைத்த காணி உரிமையாளர் எச்சங்கள் இருப்பதை அவதானித்து,  அது தொடர்பில்,  கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், குறித்த எச்சங்களை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி பார்வையிட்ட பின்னர் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

போர் காலத்தில் உயிரிழந்தவரின் சடலமாக இது இருக்கலாமென, பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X