Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூலை 09 , பி.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
வடக்கு மாகாணத்தில் தற்போது பாரியளவில் இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், வட மாகாண மக்கள் தொடர்ந்தும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனரென, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் மேஜர் ஜெனரல் கமால் குணவர்தனவுக்கு, இன்று அனுப்பிவைத்துள்ள அவசர கடிதத்திலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில், சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாக குறித்து சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு இருப்பதால், மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இதனால், மக்களின் அன்றாடச் செயல்பாடுகளும் பாதிப்படைந்துள்ளது. அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய மக்கள் பயணங்களை மேற்கொள்வதிலும் பாரிய சிக்கல்களை எதிர் நோக்கியுள்ளனர். மேலும் மீனவர்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.
”இந்த நிலையில் வட மாகாணத்தில் என்றுமில்லாத அளவில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ சோதனைச் சாவடிகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்ற வகையில் கூடிய கவனம் செலுத்தி, வட மாகாண மக்களின் இயல்பு நிலை வழமைக்கு திரும்புவதற்கு ஆவணம் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்” என அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
17 minute ago
20 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
20 minute ago
25 minute ago