2025 மே 09, வெள்ளிக்கிழமை

’இராணுவத்தால் பொருளாதாரம் சூறையாடப்பட்டுள்ளது’

Niroshini   / 2021 ஜூலை 21 , பி.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

தமிழர்களின் பொருளாதாரம் இலங்கை இராணுவத்தால் சூறையாடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த வவுனியா மாவட்டத்தில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்,  அதனை உருவாக்க அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவின் உதவி தமிழர்களுக்கு தேவை என்றும் கூறினர்.

வவுனியா மாவட்டத்தில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்,  போராட்டம் மேற்கொள்ளும் இடத்தில், இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, இவ்வாறு தெரிவித்னர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், சீனர்கள் தங்கள் கடல் அட்டைப்பண்ணையை கிளிநொச்சிக்கு  கொண்டு வர முடிந்தால், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா  நம் தாயகத்திலும் பல்வேறு பொருளாதார திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்றனர்.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவின் பொருளாதார முதலீட்டை நாங்கள் வரவேற்கிறோமெனத் தெரிவித்த அவர்கள், இந்த முதலீடுகள் தங்களுக்கு மிகவும் தேவையானது எனவும் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X