சண்முகம் தவசீலன் / 2018 மார்ச் 26 , பி.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு உடையார்கட்டுக் குளத்தில் இருந்து படையினரின் முகாம் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்துக்கு நீர் எடுப்பதை நிறுத்துமாறு கோரி, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் முன்பாக இன்று (26) பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்துஐயன்கட்டு நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள உடையார்கட்டுக் குளத்தில் இருந்து படையினரின் முகாம் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்துக்கு நீர் எடுப்பது சட்டத்துக்கு முரணானதும் மக்களுக்கு குறிப்பாக விவசாயிகள் நன்னீர் மீன்பிடி தொழிலாளிகளுக்கு பாதிப்பானதுமாகும். எனவே இதை உடனடியாக நிறுத்துமாறு கடந்த புதுக்குடியிருப்பு அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு இராணுவத்தினர் சம்மதம் வழங்கியிருந்தனர்.
இருப்பினும் இன்று (26) வரை அவை அகற்றப்படவில்லை. இதனால் அபிவிருத்திக்குழுவில் உறுதியளித்த தீர்மானத்தை நிறைவேற்றாது இராணுவம் உதாசீனம் செய்துள்ளது எனவும் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நடவடிக்கை எடுக்காவிடில், தாம் சிறுபோகத்தை கைவிடுவதாக இதன்போது மக்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, வடமாகாண முதலமைச்சர், வடமாகாண விவசாய அமைச்சர், முல்லைத்தீவு மாவட்டச் செயலர், வடமாகாணசபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் ஆகியோருக்கு மகஜர்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
10 minute ago
28 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
28 minute ago
1 hours ago
1 hours ago