Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2018 ஜனவரி 18 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான சுமார் 150 மில்லியனுக்கு மேற்பட்ட சொத்துக்களை அழித்தும், அபகரித்தும் அந்த மக்களை தொடர்ந்தும் வீதியில் வைத்து போராடுகின்ற நிலையை இந்த அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது’ என வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு கேப்;பாப்புலவு பகுதியில் 138 வரையானயான குடும்பங்கள் தமது பூர்விக நிலங்களை விடுவிக்குமாறு கோரி கடந்;த 11 மாதங்களுக்கு மேலாக வீதியில் போராடி வருகின்;றனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 28ஆம் திகதி 38 குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகள் மாத்திரமே விடுவிக்கப்பட்ட நிலையில் 100 குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகள் பாடசாலை, முன்பள்ளி, பொதுமயானம், பலநோக்குக் கூட்டுறவுச்சங்கம் உள்ளிட்ட பொதுக்கிணறுகள் என்பன இதுவரை விடுவிக்கப்;படவில்லை.
இதேவேளை, விடுவிக்கப்பட்ட காணிகளில் காணி எல்லைகள் தெரியாதவாறு அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் காணிகளில் பல கட்டடங்களையும் விடுதிகளையும் பயன்தருமரங்களையும் அழித்துள்ளதாக விடுவிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்தபோது,
‘கேப்பாப்புலவு பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை இன்னமும் இராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது.
இந்த நிலங்களுக்காக மக்கள் ஒரு வருடகாலமாக வீதியில் போராடுகின்ற நிலையை இந்த அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கின்றது. இதனை விட இந்த மக்களின் காணிகளில் இருந்த சுமார் 150 மில்லியனுக்கு மேற்பட்ட சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன.
நிலங்களை ஆக்கிரமிரத்து வைத்துவிட்டு அதில் இருந்து வெளியேற இராணுவத்துக்கு நிதி உதவி வழங்கிய அரசு, இந்த மக்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டமைக்கான நட்டஈட்டை வழங்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
24 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago
2 hours ago