Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எஸ்.றொசேரியன் லெம்பேட் / 2019 ஜனவரி 03 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
“தமிழகம் இராமேஸ்வரம் சேரான்கோட்டை கடற்பகுதியில் டி.எவ்ஆர்.பி– ஏ – 2196 எம்.என்.ஆர் என்ற இலக்கத்துடன் கரை ஒதுங்கியுள்ள படகு இலங்கை மன்னார் வங்காலை பகுதியை சேர்ந்த மீனவர்களுடையது” என வடமாகாண கடற்தொழில் இணையத்தின் தலைவர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்தப் படகில் நேற்று (02) கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவரும் கரை திரும்பவில்லை என அறியமுடிகின்றது.
அந்த படகில் சென்ற இருவரும் தற்போது எந்த நிலையில் இருக்கின்றனர் என்பது கண்டறியப்பட வேண்டும்.
அவர்கள் எங்கேனும் கரை ஒதுங்கியுள்ளார்களா என்பது தொடர்பில் நாங்களும் ஆராய்ந்து வருகின்றோம்.
மேலும், இலங்கை, இந்திய அரசாங்கம் இவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.
1 hours ago
3 hours ago
15 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
15 Aug 2025