Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2020 ஒக்டோபர் 18 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட், சுப்பிரமணியம் பாஸ்கரன்
கச்சத்தீவு அருகே, நேற்று (17), அதி நவீன ரோந்து படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினர், இராமேஸ்வரம் மீனவர்களை அச்சுறுத்தி விரட்டியடித்தனர்.
இச்சம்பவம், தமிழகக் கடலோர கிராமங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2ஆம் திகதி முதல் இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தம் மற்றும் வானிலை மைய எச்சரிக்கை உள்ளிட்ட காரணங்களால், 15 நாள்களாக மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்தனர்.
இந்த நிலையில் காற்றின் வேகம் குறைந்ததையடுத்து, சனிக்கிழமை மீன் வளத்துறையிடம் அனுமதி டோக்கன் பெற்று இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 4,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.
இந்நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு கச்சத்தீவுக்கும் - தனுஸ்கோடிக்கும் இடையே இராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, 5க்கும் மேற்பட்ட அதி நவீன ரோந்து படகுகளில் துப்பாக்கிகளுடன் வந்த இலங்கைக் கடற்படையினர், மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் அச்சுறுத்தி விரட்டியடித்தனர்.
இதையடுத்து, அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 50க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், மீன்பிடிக்க முடியாமல், மீனவர்கள் கைது நடவடிக்கைக்கு அச்சப்பட்டு, படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளை கடலில் வீசி விட்டு கரை திரும்பினர்.
இதனால் படகு ஒன்றுக்கு 40 ஆயிரம் முதல் 1 இலட்சம் ரூபாய் வரை நட்டம் ஏற்பட்டுள்ளதாக, கரை திரும்பிய மீனவர்கள் தெரிவத்துள்ளனர்.
11 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
19 minute ago