2025 மே 08, வியாழக்கிழமை

இறுக்கமான பயணக் கட்டுப்பாடு இன்று தளர்வு

Niroshini   / 2021 ஜூன் 07 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார், சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - சாந்தபுரம் கிராமத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த இறுக்கமான பயணக் கட்டுப்பாடு, இன்று பிற்பகலளவில் தளர்த்தப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக கிராமத்தை முடக்கி வைத்திருப்பதால் அன்றாடம் தொழில் செய்து வாழ்வோர் சிரமப்படுவதாக  மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இணைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன் விடுத்த அவசர கோரிக்கையையடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இன்று  காலையில், சாந்தபுரம் கிராமத்தின் நிலைமை தொடர்பாக வை.தவநாதன் அவசர கவனத்துக்குக் கொண்டுவந்ததையடுத்து,  மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன் உடடினயாக ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் பேசி, மாவட்டச் செயலாளர், பிராந்திய சுகாதாரசேவைப் பணிப்பாளர் ஆகியோருடனும் கலந்துரையாடியதன் பிரகாரம் இன்று பிற்பகலளவில் சாந்தபுரம் கிராமத்தின் இறுக்கமான பயணக் கட்டுப்பாட்டை நீக்குவது என்று, சுகாதாரத் தரப்பால் உறுதியளிக்கப்பட்டது.

எனினும், நாடு முழுவதிலும் நடைமுறையிலுள்ள பொதுவான பயணக் கட்டுப்பாடு விதிமுறைகள் தொடர்ந்தும் அமுலிலிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X