2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இலங்கை சுற்றி சாதனைப் பயணம்

Editorial   / 2019 பெப்ரவரி 06 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, வவுனியாவைச் சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் என்பவர், இலங்கையை, சைக்கிளில் சுற்றும் சாதனைப் பயணமொன்றை, ஞாயிற்றுக்கிழமை (10) மேற்கொள்ளவுள்ளார்.

வவுனியா - கோவில்குளம் சிவன் கோவிலுக்கு முன்னால் இருந்து, ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்தச் சாதனை பயணம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்தில், புதன்கிழமை (13) காலை 11 மணிக்கு நிறைவுறும்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை தனிப் பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும், மலையக மக்களுக்கு தனி வீடுகள் அமைத்து கொடுக்கப்பட வேண்டும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பள உயர்வை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே, இந்தச் சாதனை பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்தச் சாதனை சைக்கிள் பயணம், 2125 கிலோ மீற்றர் தூரத்தை கொண்டமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .