2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த பெறுமதியான பொருள்கள் பறிமுதல்

Niroshini   / 2021 ஜூன் 28 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-றொசேரியன் லெம்பட்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சுறா துடுப்பு,  ஏலக்காய், பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை என்பன, மெரைன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன் போது, சந்தேகத்தின் பேரில், இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (27) மாலை இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

தூத்துக்குடி மாவட்டம், காயல் பட்டினத்தில் இருந்து இராமநாதபுரம் நோக்கி வந்த சரக்கு  வாகனனமொன்றை, தேவிபட்டினம் மெரைன் பொலிஸார், திருப்புல்லாணி அருகே வைத்து வழிமறித்து சோதனை செய்தனர்.

இதன்போது, தலா 30 கிலோகிராம் வீதம் 15 மூடைகளில் இருந்த சுறா இறக்கைகள், 250 கிலோகிராம் ஏலக்காய் மூடைகள் 5 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.


இதையடுத்து, வாகன சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த பொருள்கள்,  கீழக்கரை சேர்ந்த காசிம் முகமது என்பவரது  குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரியவந்தது.
 
அதன் அடிப்படையில்,  காசிம் முகமது என்பவரது குடோனுக்கு விரைந்த பொலிஸார், அங்கு சோதனை செய்த போது, பதப்படுத்திய நிலையில் இருந்த 55 கிலோகிராம் கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர்.

இப்பொருள்கள் அனைத்தும், மருத்துவ பயன்பாடடுக்காக கீழக்கரையில் இருந்து கடல் வழியாக, இலங்கைக்கு கடத்தவிருந்ததாக,  விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
இச்சம்பவத்தை அடுத்து, கீழக்கரையைச் சேர்ந்த காசிம் முகமது, முகமது மீரா சாகிப்,  சாகப்தீன் சாகிப், மண்டபத்தைச் சேர்ந்த இம்ரான் கான், சேதுக்கரையைச் சேர்ந்த ஹபீப் உசேன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .