2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

இலங்கையிலிருந்து தப்பி ஓடும் மக்கள்

Freelancer   / 2022 ஏப்ரல் 08 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

லெம்பர்ட்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும்  மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு வருகின்ற நிலையில்  மன்னாரில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இன்று   (8) அதிகாலை தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர்.

அண்மையில் மன்னார் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த 3 குடும்பங்களை சேர்ந்த 12 பேர் கடல் வழியாக தனுஷ்கோடி சென்றடைந்தனர். 

தமிழகத்திற்கு அகதிகளாக வந்த அவர்களை  மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று (8) வெள்ளிக்கிழமை அதிகாலை மன்னார் முத்தரிப்புத்துறை யை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம்  தனுஷ்கோடி இலங்கைக்கு அருகே உள்ளதால் இலங்கை தமிழர்கள் இறுதிக்கட்ட போரின்போது அகதிகளாக தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்குள் வந்த இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் தங்கியுள்ளனர்.

இதே போல் தற்போது  இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் கடும் விலை ஏற்றம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக இலங்கை தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக வரக்கூடும் என்பதால் சர்வதேச கடல் எல்லை பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என  கடலோர பாதுகாப்பு குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை (7) இரவு  மன்னார் மாவட்டம் முத்தரிப்புத்துறை பகுதியை சேர்ந்த கிஷாந்தன் (34), ரஞ்சிதா (29), ஜெனீஸ்டிக்கா (10),மற்றும் இரண்டரை (2- 1/2)வயது சிறுவன் ஆகாஷ் ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர்  படகு ஒன்றில் புறப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை (8) அதிகாலை சுமார் 2 மணி அளவில் தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரையில்  வந்து இறங்கி உள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராமேஸ்வரம் மெரைன் போலீசார்  இலங்கைத் தமிழர்களை மீட்டு மண்டபம் மெரைன் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை விலை ஏற்றம் மற்றும் மண்ணெய், டீசல்,பெட்ரோல் உள்ளிட்ட பொருட்கள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால் தமிழகத்துக்கு அகதிகளாக வந்தாக  பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இலங்கை தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பின் நான்கு இலங்கை  தமிழர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்க படுவார்கள் என மெரைன் போலீசார் தெரிவித்துள்ளனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .