Freelancer / 2023 ஜனவரி 10 , மு.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு. தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலக பிரிவின் பொன்னகர் கிராம அலுவலர் பிரிவில் வாழ்கின்ற மக்கள், தங்கள் வீடுகளுக்கான இலவச குடிநீர் இணைப்புக்கான விண்ணப்பப்படிவத்தை பெற்று, பூர்த்தி செய்து வழங்காது விட்டிருப்பின் செவ்வாய்க்கிழமைக்குள் (17) விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்து, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பொன்னகர் கிராம மக்களுக்கான இலவச குடிநீர் விநியோகத்துக்கான நடமாடும் சேவையின் போது அலுவலர்கள், பொதுமக்களின் வீடுகளுக்கு வருகை தந்து விண்ணப்பப்படிவங்களை வழங்கியிருந்தனர். ஆனால், சிலர் படிவங்களைப் பூர்த்தி செய்து, இதுவரை சமர்பிக்கவில்லை.
எனவே, விண்ணப்பப்படிவங்களை சமர்பிக்காதவர்கள், இதுவரை விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ளாதவர்கள் கிளிநொச்சி ஏ9 வீதி 155 ஆம் கட்டையில் அமைந்துள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையில் விண்ணப்பபடிவங்களை பெற்று, 17 ஆம் திகதிக்குள் கையளிகின்ற போதே இத் திட்டத்தின் ஊடாக இலவச குடிநீரை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் தெரிவித்துள்ளனர்.
09 Nov 2025
09 Nov 2025
09 Nov 2025
09 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
09 Nov 2025
09 Nov 2025
09 Nov 2025
09 Nov 2025