2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதல்: மூவர் காயம்

George   / 2016 ஒக்டோபர் 30 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீபாவளி தினமான சனிக்கிழமை, வவுனியா மதினாநகர் பகுதியில், தமிழ்,  முஸ்லிம் இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தமிழ் இளைஞர்கள் செலுத்திவந்த முச்சக்கரவண்டியொன்று  தடம்புரண்டுள்ளது. அதனையடுத்து, அப்பகுதியில் உள்ள முஸ்லிம் இளைஞர்கள் உதவிக்காக சென்றுள்ளனர்.

இதனையடுத்து, சிறிது நேரத்தில் பூந்தோட்டம் பகுதியில் இருந்து வந்த தமிழ் இளைஞர் குழுவொன்று,  உதவிசெய்த முஸ்லிம் இளைஞர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்' என வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் தமிழ் இளைஞர்கள் மற்றும் முஸ்லிம் இளைஞன என மூவர் காயமடைந்ததுடன்,  வவுனியா வைத்தியசாலையில் இரு இளைஞர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .