2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இளஞ்செழியனுக்கு எதிரான பிடியாணை இரத்தானது

Editorial   / 2020 ஜனவரி 29 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

நில அபகரிப்புக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத குற்றச்சாட்டில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் அன்டனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு இரத்து செய்யப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு  முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில், மக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணியை அபகரிக்கும் முகமாக அளவீட்டு பணிகளை முன்னெடுக்கச் சென்ற நில அளவீட்டாளர்களை எதிர்த்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டமைக்காக, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்  அ.ஜெ.பீற்றர் இளஞ்செழியன்,   வட்டுவாகல் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் அ.சண்முகலிங்கம் ஆகியோருக்கு எதிராக முல்லைத்தீவுப் பொலிஸாரால் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு, திங்கட்கிழமை (27)  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அ.ஜெ. பீற்றர் இளஞ்செழியன் மன்றில் ஆஜராகியிருக்கவில்லை.

இதையடுத்து, அவருக்கு எதிராக பிடியாணை உத்தரவைப் பிறப்பித்த நீதவான் வழக்கு விசாரணையை மே மாதம் 18ஆம்  திகதி வரை ஒத்திவைத்தார்.

இவ்வாறாக பிடியாணை பிறப்பித்த நிலையில், அ.ஜெ. பீற்றர் இளஞ்செழியன்  தனது சட்டத்தரணி ஊடாக நேற்று (28)  நீதிமன்றில் ஆஜராகினார்.

இதையடுத்து, அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை இரத்து செய்த நீதவான், வழக்கு விசாரணையை மே மாதம் 18ஆம்  திகதி வரை ஒத்திவைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .