2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

இளநிலா குடியிருப்பு துயிலுமில்ல வீதி புனரமைப்பு

Editorial   / 2019 மே 24 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - முழங்காவில், இளநிலா குடியிருப்பு துயிலுமில்ல வீதி, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனால் புனரமைக்கப்பட்டது.

பல ஆண்டுகளாக புனரமைப்புகள் எதுவுமின்றி காணப்பட்ட இந்த வீதி இளநிலா குடியிருப்பு மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக, நாடாளுமன்ற உறுப்பினரின் ஊரெழுச்சித்திட்ட நிதியினூடாக புனரமைப்பு செய்யப்படுகின்ற இவ்வீதிக்கு இரண்டு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வீதியின் ஆரம்ப நிகழ்வு நடைபெற்று வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றது. இந்த ஆரம்ப வேலைகளை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஆரம்பித்து வைத்தார்.

அவருடன் பூநகரி பிரதேச சபை தவிசாளர் அ.ஐயம்பிள்ளை, உப தவிசாளர் ஸ்ரீரஞ்சன், பூநகரி பிரதேச சபையின் செயலாளர் கம்சநாதன், முழங்காவில் அபிவிருத்தி உத்தியோகத்தர் றோஸ்வேஜினி, சமுர்த்தி உத்தியோகத்தர் சி.சபித்திரா, பூநகரி பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் நேசன் என பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .