2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இளைஞர் குழு மோதலில் மூவருக்கு காயம்

Editorial   / 2019 செப்டெம்பர் 30 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

வவுனியா – வைரவபுளியங்குளம், சிறுவர் பூங்காவுக்கு அருகாமையில், நேற்று (29) மாலை இடம்பெற்ற மோதல் சம்பவத்தில், மூவர் காயமடைந்துள்ளனர்.

வவனியா மாவட்ட பாடசாலை உதைபந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில், வைரவபுளியங்குளம் சிறுவர் பூங்காவில், பாடசாலை மட்ட உதைபந்தாட்ட இறுதிப் போட்டி நடைபெற்றது.

இதன்போது, சிறுவர் பூங்காவுக்கு அருகில், மதுபோதையில் இருந்த இளைஞர் குழுவினர் மோதிக்கொண்டனர்.

இந்நிலையில் போட்டியைப் பார்வையிட்டுக்கொண்டிருந்த சொச்சிக்குளம் பாடாலை அதிபர் மீதும், மோதல் சம்பவத்தைதத் தடுக்கச்சென்ற பெற்றோர் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அத்துடன், மதுபோதையில் நின்ற இளைஞர் குழுவினர், மைதானத்தை நோக்கி கற்களை வீசியுள்ளனர். இதன்போது, ஆசிரியர் ஒருவர் காயமடைந்தார்.

இது தொடர்பில், பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட போதும், பொலிஸார் அசமந்தப் போக்கில் செயற்பட்டதாக, அங்கிருந்தவர்கள் குற்றஞ்சாட்டினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X