Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூலை 22 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
இழந்தவற்றைப் பெற்றுத்தருவேன் என்று தான் வரவில்லையெனத் தெரிவித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் சார்ள்ஸ் நிர்மலநாதன், இருப்பதை தாங்கள் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமெனவும் தக்கவைத்தால் மாத்திரம் தான், தாங்கள் ஒற்றுமையாக இருக்க முடியுமெனவும் கூறினார்.
விசுவமடு பகுதியில், மாணிக்கபுரம் மக்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், இழந்தவற்றைப் பெற்றுத்தருவேன் என்று நான் வரவில்லை இருப்பதை நாங்கள் தக்கவைத்துக் கொள்ளவேண்டுமெனவும் தக்கவைத்தால் மாத்திரம் தான் நாங்கள் ஒற்றுமையாக இருக்கலாமெனவும் அதன் ஊடாடத்தான் அது சாத்தியமெனவும் கூறினார்.
தமிழ் மக்களை மிகக் கொடூரமாகக் கொலை செய்வர், இன்று நாட்டில் ஜனாதிபதியாக இருக்கின்றாரெனவும், அவர் கூறினார்.
“2009ஆம் ஆண்டு தன்னுடைய கட்டளையை நடைமுறைப்படுத்திய படை அதிகாரிகளுக்குப் பதவிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இன்று அமைச்சின் செயலாளர்களாகப் பணிப்பாளாராகக் கடமையாற்றி வருகின்றார்கள். கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது, தமிழ் மக்களை அழித்ததற்காக அவர் நன்றிக்கடன் செலுத்துகின்றார். நாடாளுமன்ற உறுப்பினராக வலம் வருவதற்குப் படையினரை கொழும்பில் கூட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
“தங்கள் மக்களை மிகக் கொடூராமாக கொலைசெய்த இராணுவ அதிகாரி இன்று எங்கள் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு எந்த துணிவில் வரமுடியும் அவர் ஒரு மாயையை விரிக்கின்றார். வேலைவாய்ப்பு, தனிப்பட்ட சலுகைகள் என்று உருவாக்கி, தமிழர்களின் வாக்கை எடுக்க முயற்சி செய்கின்றார்” எனவும், அவர் தெரிவித்தார்.
மக்கள் வீட்டுச் சின்னத்துக்குக் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். எங்கள் மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்து உள்ளது. வவுனியாவில் பொலிஸார் இளைஞர்கள் மீது தாக்குதல் இன்று மன்னாரில் கடற்படை அதிகாரி இளைஞன் ஒருவரைத் தாக்கியுள்ளார். அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தான் சொல்வது 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், தமிழர்கள் மீது ஓர் இராணுவத்தினர் அடக்குமுறையான செயற்பாட்டுக்குத் தயாராகி வருகின்றார்களெனத் தெரிவித்த அவர், தங்களை அழித்துக் கொண்டிருப்பவர்களைத் தாங்கள் மாலை போட்டு வரவேற்கின்றோமெனவும் மக்களை குழப்புவதன் ஊடாகத்தான் வன்னிக்கு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினரைக் கொண்டுவரலாமெனவும் கூறினார்.
கிழக்கு மாகாணத்தில், தொல்பொருள் திணைக்களத்தில் ஒரு தமிழர்கூட இல்லையெனவும் தமிழ் மன்னர்கள் தொடர்ச்சியாக ஆண்ட நாட்டை வெளிநாட்டவர்கள்தான் ஒரு நாடாக்கி சிங்களவர்கள் கைக்குக் கொடுத்தார்களெனவும், சார்ள்ஸ் தெரிவித்தார்.
தாங்கள் இன்று சமஷ்டி முறையிலான அரசியல் யாப்பு மாற்றத்தை தான் கேட்கின்றோமெனத் தெரிவித்த அவர், அது கூட பெற்றுக்கொள்ள உரிமையில்லையா எனவும் வினவினார்.
அதனைக் கேட்பதற்குக் கூட்டமைப்புக்கு உரிமை இல்லை என்று சொல்கின்றார்களெனவும், அவர் தெரிவித்தார்.
இன்று, குருநாகல் மாவட்டத்தில் தொல்பொருள் நிலையம் ஒன்று சேதம் விளைவித்துள்ளதாகச் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். வடக்கு - கிழக்கு தமிழர் தாயக பிரதேசங்களில் எவ்வளவோ தொல்பொருள் நிலையங்கள் நாகர் காலத்தில் இருந்து எங்கள் மன்னர் ஆண்ட அடையாளர்கள்
அழித்துக்கொண்டிருக்கின்றார்கள். அதைக் கேட்பதற்கு எங்களிடம் ஒற்றுமையின்மையை ஏற்படுத்தித் தடுகின்றார்கள்.
இந்த நாட்டின் ஜனாதிபதி மிக கொடூரமானவர். மஹிந்தவை விட மோசமானவர். இன்று இந்தத் தேர்தலில் தமிழர்களின் வாக்கைச் சிதறடிப்பதற்குத் திட்டமிடல் செய்தது பசில் ராஜபக்ஷ, வன்னியில் எப்படி தமிழர்களின் வாக்கைப் பிரிக்கலாம் என்பதில் முழு மூச்சாகச் செயற்பட்டவர் எனவும், அவர் சாடினார்.
14 minute ago
17 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
17 minute ago
22 minute ago