2026 மே 01, வெள்ளிக்கிழமை

’இழப்பீடுகளை நேரடியாக வந்து வழங்கவும்’

Editorial   / 2019 மார்ச் 25 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் வழங்குகின்ற விவசாயிகளுக்கான இழப்பீடுகளை கிராமங்களுக்கு வருகை தந்து வழங்குவதற்கு மாவட்டச் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உதாரணமாக, வெள்ளப் பாதிப்புகளை எதிர்கொண்டவர்களுக்கான இழப்பீடுகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளில் மாவட்டச் செயலகம் ஈடுபட்டுள்ள நிலையில் முல்லைத்தீவுக்கு நீண்ட தூரம் பயணம் செய்து இழப்பீடுகளை பெற்றுக் கொள்ள முடியாது இழப்பீடுகளை அதிகாரிகள் கிராமங்களுக்குச் சென்று வழங்குவதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன், விவசாயிகளுக்கான இழப்பீடுகளை கமநல சேவை நிலையங்களில் வைத்து வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .