2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

’இவர்களுக்கான கொடுப்பனவுகளை விரைந்து வழங்குங்கள்’

Niroshini   / 2021 ஜூன் 06 , பி.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாவட்டத்தில், சமுர்த்தி கொடுப்பனவுக்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ளோர், மாற்றுத் திறனாளிகள், முதியவர்களுக்கான 5,000 ரூபாய் கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என, துணுக்காய் பிரதேச சபை உறுப்பினர் சற்குணநாதன் சுயன்சன் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், தற்போது சமுர்த்திக்காக காத்திருப்போர், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதென்றார்.

எனவே, இக்கொடுப்பனவுகளை விரைந்து வழங்குவதற்கு மாவட்டச் செயலகம், பிரதேச செயலகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அவர் கூறினார்.

 மேற்படி பயனாளிகள், தமது கொடுப்பனவுகளுக்காக சமுர்த்தி உத்தியோகத்தர்களிடமும் கிராம அலுவலர்களிடமும் தொடர்ந்து தொடர்புகொண்டு வருவதாகவும், அவர்    தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .