2025 மே 17, சனிக்கிழமை

ஈ.பி.டி.பியின் வேட்பாயர்கள் அறிமுகம்

Editorial   / 2020 மார்ச் 11 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

நாடாளுமன்றத் தேர்தலில், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின சார்பில், வவுனியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் விவரங்களை, அக்கட்சி அறிவித்துள்ளது.

அதற்கமைவாக, ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் மூலம், 1994ஆம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இராயகுகனேஸ்வரன், கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் குலசிங்கம் திலீபன், வவுனியா நகர பொது சுகாதாரப் பரிசோதகராக நகர சபையில் கடமையாற்றிய சி.கிரிதரன் ஆகியோர், எதிர்வரும் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடவுள்ளனர்.

வேட்பாளர்களுக்கான அறிமுக நிகழ்வு, வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில், நேற்று (10) நடைபெற்றது.

இதன்போது, வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை, கட்சியின் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அறிமுகப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .