2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

உண்டியலில் பணத்தை போடச் சென்றவருக்கு காயம்

Editorial   / 2020 பெப்ரவரி 06 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - நெடுங்கேணி பகுதியில், இன்று (06) காலை இடம்பெற்ற விபத்தில், பஸ் நடத்துனர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

முல்லைதீவில் இருந்து வவுனியா நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று, நெடுங்கேணி - நொச்சியடி ஐயனார் கோவிலில் வழிபாட்டுக்காக நிறுத்தப்பட்டது.

இதன்போது, பஸ் நடத்துனர் கோவில் உண்டியலில் பணத்தை இடுவதற்காக வீதியைக் கடக்க முற்பட்ட போது, திருகோணமலையில் இருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த கார் ஒன்று, அவரை மோதியது.

இதில் காயமடைந்த நடத்துனர், நெடுங்கேணி பிரதசே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .