2025 மே 08, வியாழக்கிழமை

’உதவிகள் விரைந்து கிடைக்க வேண்டும்'

Niroshini   / 2021 ஜூன் 09 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள், சமுர்த்தி காத்திருப்போர் பட்டியலில் உள்ளோர்களுக்கான கொடுப்பனவுகளை விரைந்து வழங்குவதற்கு மாவட்டச் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் திருமதி.சர்மிளா தயாபரன் தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,  மேற்படி கொடுப்பனவுகளுக்காக காத்திருப்போர் கொடுப்பனவுகள் கிடைக்கவில்லை என்பதால் அதிகாரிகளிடம் முறையிடுமாறு எம்மிடம் தெரிவிக்கின்றனரென்றார்.

மேற்படி குடும்பங்கள் வாழ்வாதார ரீதியாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனரெனத் தெரிவித்த அவர், கூடுதலான குடும்பங்கள் தொழில் செய்ய முடியாத நிலையில் உள்ளனரென்றார்.

'வறுமையான குடும்பங்கள் என அடையாளப்படுத்தப்பட்டு சமுர்த்திக்கு உள்வாங்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் வறுமை நிலையில் வாடுகின்றனர். மாவட்டத்தில் முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் கூடுதலாக உள்ள நிலையில் அரச கொடுப்பனவுகளை விரைந்து பெற்றுக் கொடுப்பதற்கு மாவட்டச் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

'உணவு நெருக்கடிக்கு மாவட்டச் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கோரிக்கையாகும்.  பயணத் தடைகள் உதவிக்காக காத்திருப்போர், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளை கூடுதலாகப் பாதித்துள்ளது' எனவும் பிரதேச சபை உறுப்பினர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X