2025 மே 07, புதன்கிழமை

உபதவிசாளர் உள்ளிட்ட 10 பேர் கைது

Niroshini   / 2021 ஜூன் 07 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

புதுக்குடியிருப்ஆடைத்தொழிசாலையை திறப்பதை தடுப்பதற்காக, எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட புதுக்குடியிருப்பு பிரதேச சபை உபதவிசாளர் க.ஜெனமேஜெயந் உள்ளிட்ட பத்து பேர், புதுக்குடியிருப்பு பொலிஸாரால கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து, புதுக்குடியிருப்பின் 9 கிராம அலுவலர் பிரிவுகள் முற்றுமுழுதாக முடக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்றைய தினம் (07), ஆடைத்தொழிற்சாலைக்கு பணியாளர்களை வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, ஆடைத்தொழிற்சாலை திறப்பதைத் தடுப்பதற்காக,  இன்று (07) காலை, புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலைக்கு முன்பாக. எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, இந்த எதிர்ப்பு நடவடிக்கைய முன்னெடுத்த குற்றச்சாட்டில், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உப தவிசாளர் க.ஜெனமேஜெயந் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

இதேவேளை, குறித்த பகுதிக்கு வருகை தந்து எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட  மக்களையும் தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X