2025 மே 20, செவ்வாய்க்கிழமை

உப்புக்குளத்தில் தீ விபத்து

Editorial   / 2019 செப்டெம்பர் 19 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

மன்னார் - உப்புக்குளம் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கடினப்பொருள் விற்பனை நிலையத்தில், நேற்று (18) இரவு 11 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், குறித்த விற்பனை நிலையத்தில் இருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருள்கள் எறிந்து நாசமாகியுள்ளன.

வழமை போல் குறித்த கடினப்பொருள் விற்பனை நிலையம், இரவு மூடப்பட்ட நிலையிலேயே, இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது, மன்னார் நகர சபை பௌசர் ஊடாக நீர் கொண்டு வரப்பட்டு, தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில், இதுவரை 3க்கும் மேற்பட்ட பாரிய தீ விபத்து, இடம்பெற்ற போதும், தீயணைப்பு வாகனம் இல்லாமையால் தீயைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X