Editorial / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
தேசிய நத்தார் விழா நிகழ்வு தொடர்பான உயர் மட்டக் கலந்துரையாடலொன்று, மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று (4) காலை 10 மணியளவில் நடைபெற்றது.
மன்னார் மாவட்டச் செயலாளர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க, கிறிஸ்தவ விவகார இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் அலுவிகார, மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை மற்றும் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, தேசிய நத்தார் தின நிகழ்வுகள், மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 16ஆம் திகதியன்று நடத்துவதற்கான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அது குறித்த ஏற்பாடுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.
6 hours ago
8 hours ago
9 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago
02 May 2026