Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 செப்டெம்பர் 19 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா நகரசபை அமர்வு இன்றைய தினம் தவிசாளர் இ,கௌதமன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, கடந்த ஏப்ரல் மாதம் வவுனியா நகரசபை ஊழியர்கள் நான்கு பேர், வவுனியா தாண்டிக்குளம் சோயா வீதியில் அமைந்துள்ள நகரசபைக்கு சொந்தமான மாடு வெட்டும் கொல்களத்தில் மாட்டின் கழிவுகள் கொட்டப்படும் குழியை தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த போது, குழியில் இருந்து வெளியேறிய விசவாயு தாக்கத்தால் உயிரிழந்தனர்.
இந்நிலையில், உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்தினருக்கு தலா 150,000 ரூபாய் வழங்குவதற்கு வவுனியா நகரசபை அமர்வில் முன்னம் ஏகமனதாக தீர்மானிக்கபட்டிருந்தது.
இதற்கமைய குறித்த நிதி வழங்குவதற்கான அனுமதி வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் வழங்கபட்ட நிலையில், இன்றயதினம் இடம்பெற்ற வவுனியா நகரசபை அமர்வில் வைத்து, அவர்களது குடும்பத்தினருக்கு குறித்த நிதி வழங்கிவைக்கபட்டது.
குறித்த நிதியினை வழங்குவதற்கு வவுனியா உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பரிந்துரை வழங்காதநிலையில், நகரசபையின் முழு முயற்சியினால் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அதற்கான அனுமதியை வழங்கியிருந்ததாக சபை உறுப்பினர் ஒருவரால் சுட்டிகாட்டபட்டது.
இதேவளை குறித்த ஊழியர்களின் குடும்ப அங்கத்தவர்களிற்கு சபைக்குள் வேலை வாய்ப்பையும் வழங்குவது தொடர்பாகவும் சபையில் கலந்துரையாடப்பட்டது.
குறித்த சம்பவத்தில் வவுனியா - சகாயமாதாபுரம், அண்ணாநகரை சேர்ந்த க.வசந்தகுமார், தே.சந்தணசாமி,சே.செல்வராஜா.ஞா.சசிகுமார் ஆகியோரே உயிழந்தமை குறிப்பிடத்தக்கது.
58 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago