Niroshini / 2021 மே 10 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு மாவட்டத்தில், உரங்கள், களை, பூச்சி நாசினிகள் ஆகியவற்றை கூடுதல் விலையில் விற்கப்படுவதைத் தடுப்பதற்கு, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, துணுக்காய் பிரதேச சபை உறுப்பினர் சற்குணநாதன் சுயன்சன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தொடர்ந்துரைத்த அவர், முல்லைத்தீவு மாவட்டத்தில், தற்போது சிறுபோக நெற்செய்கையில் விவசாயிகள் ஈடுபட்டு வரும் நிலையில், தனியார் வர்த்தக நிலையங்களில் 4,000 ரூபாய்க்கும் மேல் உரங்கள் விற்கப்படுகின்றன என்றார்.
கடந்த காலங்களில், பொறிக்கப்பட்ட விலையில் இருந்து குறைத்தே களை, பூச்சி நாசினிகள் வழங்கப்பட்டு வந்ததாகத் தெரிவித்த அவர், இந்நிலையில் தற்போது அதிக விலையில் விற்கப்படுவதால் விவசாயிகள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனரெனவும் கூறினார்.
எனவே, இது தொடர்பில் மாவட்டச் செயலாளர் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் இதனுடன் தொடர்புடைய அதிகாரிகள் தனியார் விற்பனை நிலையங்களுக்குச் சென்று அதிக விலையில் விற்காமல் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், சற்குணநாதன் சுயன்சன் கோரிக்கை விடுத்துள்ளார்.
8 hours ago
8 hours ago
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
14 Nov 2025
14 Nov 2025