2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

’உரம் சேமிப்பில் இல்லை’

Niroshini   / 2021 ஜூன் 14 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார், சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு - குமுளமுனை கமநல சேவை நிலையத்தில், தற்போது உரம் சேமிப்பில் இல்லையெனத் தெரிவித்த குமுளமுனை கமநல சேவை நிலையத்தின் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெ.சயேந்திரன், களஞ்சிய வசதிகள் இருந்திருக்குமானால், கூடுதலான உரங்களை சேமித்து வைத்து இருக்க முடியுமெனவும் கூறினார்.

குமுளமுனை கமநல சேவை நிலையத்தால் முழுமையாக உரம் வழங்கப்படவில்லையென, அப்பகுதி விவசாயிகளால் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இது தொடர்பாக வினவிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், தண்ணிமுறிப்புக் குளத்தின் கீழ், 2,700 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றதெனவும் இதில், 1,500 ஏக்கருக்கான உரம் வழங்கப்பட்டுள்ளதெனவும் கூறினார்.

இன்னும், 1,200 ஏக்கருக்கான உரமே வழங்கப்பட வேண்டி உள்ளதாகவும், அவர் கூறினார்.

தற்போது உரம் தற்போது சேமிப்பில் இல்லையெனத் தெரிவித்த அவர், களஞ்சிய வசதிகள் இருந்திருக்குமானால் கூடுதலான உரங்களை சேமித்து வைத்து இருக்க முடியுமென்றும் உரங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X