2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

உரிமை கோரப்படாத 55 ஏக்கர் நெற்பயிர் அழிப்பு

Editorial   / 2017 ஜூன் 04 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ் மேலதிக விதைப்பில் ஈடுபட்டு, உரிமை கோரப்படாத 55 ஏக்கர் நெற்பயிர் அழிக்கப்பட்டுள்ளதாக, கிளிநொச்சி மாவட்ட கமநல சேவை உதவி ஆணையாளர் வே.ஆயகுலன், நேற்று தெரிவித்தார்.

“கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தீர்மானத்திற்கமைவாக மேலதிக பயிர்ச் செய்கைகள் அழிக்கப்பட்டு வருகின்றன.

மேலதிக விதைப்பில் ஈடுபட்டு உரிமை கோரியவர்களின் பயிர்ச் செய்கை அழிக்காது அவர்களுக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் தண்டம் விதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பாக விவசாய அமைப்புகளுடன் கலந்துரையாடி முடிவுகள் எடுக்கப்பட உள்ளன” என்றும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .