Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2021 ஜூன் 06 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
விவசாயிகளது உற்பத்தி பொருள்களை, நேரடியாக பாவனையாளருக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, வவுனியா மாவட்டக் கமக்கார அமைப்புகளின் சம்மேளனத் தலைவர் சேதுகாவலர் தெரிவித்தார்.
வவுனியாவில், இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தரைத்த அவர், தற்போதைய நிலையில் மரக்கறிகளின் விலைகள் தொடர்பான விடயங்களை முன்னிலைப்படுத்தியுள்ளதாகவும் அதன் விலை தொடர்பான பிரச்சினைகளை கருத்திற்கொண்டு, புதிய செயற்றிட்டமொன்றை ஏற்ப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அந்த வகையில் 'விவசாயிகளிடம் இருந்து வீடு வரை' என்ற செயற்றிட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இதன் மூலம் விவசாயிகளது உற்பத்தி பொருள்களை நேரடியாக பாவனையாளருக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறினார்.
அத்துடன், விற்பனை செய்யப்படும் பொருள்களை, ஆகக் குறைந்த விலையில் கொள்வனவு செய்வதற்கான கட்டுப்பாட்டு விலையையும் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்த அவர், அந்தவகையில் விற்பனை முகவர்கள் ஊடாக இந்தப் பொருள்களை நீங்கள் பெற்றுக்கொள்ளலாமெனவும் பெற்றுக்கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்குபவர்கள் 0242229399/ 0773030953/ 0773065203 எனும் தொலைபேசி இலங்கள் ஊடாக தொடர்பை ஏற்படுத்தி, சிக்கல்களை நிவர்த்தி செய்ய முடியுமென்றும் கூறினார்.
அத்துடன், 'வெளிமாவட்டத்தில் இருந்து வருகைதந்து இங்கு வியாபாரம் மேற்கொள்பவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வழித்தட அனுமதியானது, இங்குள்ள விவசாய உற்பத்தி பொருள்களை வெளிமாவட்டத்துக்கு கொண்டுசெல்வதற்காகவே வழங்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களின் வழித்தட அனுமதிகள் இரத்துச் செய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்' என்றும், அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இவ்வாரத்துக்கான புதிய விலைப்பட்டியல்:
கத்தரிக்காய் ஒரு கிலோகிராம் 120 ரூபாய்க்கு விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டு 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். வெண்டிக்காய் கொள்விலை - 60 விற்பனை விலை - 90, கறிமிளகாய் கொள்விலை - 120 விற்பனைவிலை - 180, பயிற்றை கொள்விலை - 100,விற்பனைவிலை - 150, பாவற்காய் கொள்விலை - 170, விற்பனைவிலை - 250, புடோல் கொள்விலை - 100, விற்பனைவிலை - 125, மூட்டைமிளகாய் கொள்விலை - 150, விற்பனைவிலை - 230, பூசணி கொள்விலை - 30 விற்பனைவிலை - 45, மரவள்ளி கொள்விலை- 40, விற்பனைவிலை – 60.
விவசாய பொருள்களை வாகனத்தில் விற்பனை செய்பவர்கள் இவ்வாரத்துக்கான விலைப்பட்டியலை காட்சிப்படுத்த வேண்டும். என்று, சேதுகாவலர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
33 minute ago
41 minute ago
1 hours ago