2025 மே 10, சனிக்கிழமை

’உலக வங்கி வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்’

Niroshini   / 2021 ஜூன் 17 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாவட்டத்தில், நீர்;ப்பாசனத் திணைக்கள வேலைத்திட்டங்கள் தொடர்ந்து இடம்பெறுவதாக, முல்லைத்தீவு மாவட்டப் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் நவரத்தினம் சுதாகரன் தெரிவித்தார்.  

புயணக் கட்டுப்பாடு காரணமாக, வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பதில் சிரமங்கள் உள்ளதா  என வினவிய போதே. அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், முல்லைத்தீவு மாவட்டத்தில், நீர்;ப்பாசனத் திணைக்களத்தின் வேலைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன எனவும் குறிப்பாக உலக வங்கியால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத் திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் கூறினார்.

இதில் தடைகள் ஏற்படுத்தப்பட முடியாதெனவும், அவர் கூறினார்.

அத்துடன், 'மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கைக்கான நீர் விநியோகம் தொடர்ந்து நடைபெறுகின்றது.  திட்டமிடப்பட்டபடி குளங்களின் முக்கிய புனரமைப்பு வேலைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். தற்போது சிறுபோக நெற்செய்கையில் உரங்களைப் பெற்றுக்கொள்ள முடியாத விவசாயிகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்' எனவும், நவரத்தினம் சுதாகரன் தெரிவித்தார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X