2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

உலர் உணவு பொதிகள் வழங்க நடவடிக்கை

Niroshini   / 2021 பெப்ரவரி 10 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
-அகரன்
 
வவுனியா - பட்டாணிச்சூரில் தனிமைப்படுத்தப்பட்ட 87 குடும்பங்களுக்கான இரண்டாம் கட்ட நிவாரண உதவிகள், நாளை (11) வழங்கப்படவுள்ளன.
 
கடந்த வருட இறுதியில், பட்டானிச்சூர் பகுதியில், பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதை அடுத்து, அப்பகுதி முடக்கப்பட்டதுடன், 
அதன் தொடர்ச்சியாக, வவுனியா நகரிலும் பல தொற்றாளர்கள் அடையாளப்படத்தப்பட்டனர். 
 
இதனையடுத்து,  வவுனியா நகர் உட்பட பல கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டன. மேலும், தொற்றாளர்களுடன் தொடர்புபட்டவர்கள் என்ற ரீதியில் பலர் தனிமைப்படுத்தப்பட்டனர். 
 
அந்த வகையில், பட்டாணிசூர் பகுதியில் 87 குடும்பங்கள் வரை தனிமைப்படுத்தப்பட்டு, பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதிகளை வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டன.
 
அதன் முதற்கட்டமாக, 5,000  ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதிகள் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டிருந்தன. 
 
இதன் தொடர்ச்சியாக, குறித்த 87 குடும்பங்களுக்கு நாளை (11) இரண்டாம் கட்டமாக 5,000 ரூபாய் உலர் உணவு பொதிகளை பட்டாணிசூர் கிராமசேவகர் அலுவலகத்தில்  வைத்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .