2025 மே 05, திங்கட்கிழமை

உலர் உணவுப் பொருட்கள் கையளிப்பு

Editorial   / 2021 மே 27 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

நாட்டில் தீவிரமடைந்துவரும்  கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக, அன்றாடம் கூலி வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு , பாரிய உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில் இதனை நிவர்த்தி செய்யும் விதமாக நேற்றைய தினம் குமுழமுனை மத்தி கலைவாணி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில்  20 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ் உணவுப் பொருட்களை  குமுழமுனை வட்டார பிரதேச சபை உறுப்பினர் இ.கவாஸ்கர், குமுழமுனை மத்தி கிராம சேவகர் எஸ்.சுஜினோ, கலைவாணி சனசமூக தலைவர் எஸ்.குணசீலன்,  செயலாளர் எஸ்.விதுர்சன் மற்றும் பிரதிநிதி எஸ்.திவாகர் ஆகியோர் வழங்கி வைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X