2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

உளவளத்துணையாளருடன் கலந்துரையாடல்

Freelancer   / 2023 பெப்ரவரி 09 , பி.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் உளவளத்துணை மற்றும் உளவளத்துணை சார்ந்து பணிபுரிவோருடனான கலந்துரையாடல் நேற்று (09) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில், மாவட்ட செயலாளர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட மட்டத்தில் காணப்படும் உள சமூகப் பிரச்சினைகளை அடையாளம் காணல், அவற்றைக் குறைத்தல் – தடுத்தல், தொடர் கண்காணிப்புகளை மேற்கொள்வது என்பவற்றை நோக்கமாகக் கொண்டு குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.

குடும்ப புனர்வாழ்வு நிலையம், ஒப்ரெக் நிறுவனத்தால் கிளிநொச்சி மாவட்டத்தில் உளவளத்துறை சார்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வேலைத் திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன் உளவளத்துறை தொடர்பான பயிற்சிகளை வழங்குதல், பயிற்சி பெற்றவர்களை பயன்படுத்தும் வழிவகைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

இக் கலந்துரையாடலில் மாவட்ட உள மருத்துவ பொறுப்பதிகாரி டொக்ட​ர் ஜெயராஜா, உதவி மாவட்ட செயலாளர் ஜெ. றெமின்ரன், குடும்ப புனர்வாழ்வு நிலையத்தினர், உள வள ஆற்றுப்படுத்துனர்கள் உட்பட துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .