2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Princiya Dixci   / 2022 மார்ச் 13 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு, மாங்குளம்  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வன்னிவிளாங்குளம் பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட சட்டவிரோத துப்பாக்கியைத் தம்வசம் வைத்திருந்த ஒருவரை, நேற்றிரவு (12) மாங்குளம் பொலிஸார் கைதுசெய்தனர்.

மாங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்தே, 32 வயதுடைய மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டார்.

சந்தேகநபரை, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் மாங்குளம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .