2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

‘உழவு இயந்திரங்கள் இனி வழி மறிக்கப்படாது’

Editorial   / 2019 பெப்ரவரி 06 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில், விவசாயிகளால் நெல் அறுவடைக்காக கொண்டு செல்லப்படும் அறுவடை இயந்திரங்கள், உழவு இயந்திரங்களை வீதியில் மறித்து, பொலிஸார் இனி இடையூறுகளை ஏற்படுத்தமாட்டார்களென, கிளிநொச்சி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஹிந்த குணரட்ண தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில், நேற்று முன்தினம் (05) நடைபெற்ற விவசாயக் குழுக் கூட்டத்திலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், இவ்வாறு பொலிஸார் நடந்து கொண்டால் தமக்குத் தெரியப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், பாடசாலை நேரங்கள் தவிர்ந்த ஏனைய நேரங்களில், நெல் அறுவடை இயந்திரங்கள், உழவு இயந்திரங்கள் வீதிகளில் செல்ல வேண்டுமென, அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .