2025 மே 06, செவ்வாய்க்கிழமை

உழுந்து அறுவடை பாதிப்பு

Freelancer   / 2022 பெப்ரவரி 14 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக உழுந்து செய்கையாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

இலங்கையில் அதிக உழுந்து உற்பத்தியாகும் மாவட்டங்களில் ஒன்றாகிய வவுனியா மாவட்டத்தில் தற்போது உழுந்து அறுவடை இடம்பெற்று வருகின்றது.

எனினும் சீரற்ற காலநிலை காரணமாகவும், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினாலும் பலர் உழுந்து அறுவடையை மேற்கொள்ள முடியாமல் உள்ளனர். 

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் விதைத்து 3 மாதமாக காத்திருந்து, அறுவடைக்கு தயாரான உழுந்து பயிர்கள் மழை காரணமாக பாதிப்படைந்து வருகின்றது.

இதனால் பலரும் அறுவடையை மேற்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X