Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 செப்டெம்பர் 21 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியாவில் உழுந்துப் பயிர்ச்செய்கையை அதிகரிப்பது தொடர்பாக வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், மாவட்டசெயலகத்தின் கேட்போர் கூடத்தில் ஆளுநர் சார்ள்ஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபனின் இணைத்தலைமையில் இன்று நடைபெற்றது.
இதன்போது வவுனியா மாவட்டத்தில் உழுந்துச்செய்கையின் வீழ்ச்சி தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், அதனை அதிகரிப்பதற்கு செய்யவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆரயப்பட்டது.
அதிகளவான ஏக்கர்களில் உழுந்து உற்பத்தி இடம்பெற்று வந்த வவுனியாவில் தற்போது உழுந்து உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பாக ஆளுநரால் கோரப்பட்டது.
ஒவ்வொரு வருடமும் காலநிலை மாற்றத்தால் 3,000 தொடக்கம் 3,500 ஏக்கர் வரையிலான உழுந்து பயிர்ச்செய்கை அழிவடைகிறது. இதனால் விவசாயிகள் உழுந்துசெய்கையில் ஈடுபடுவதற்கான ஆர்வம் குறைவடைவதாகவும் உற்பத்தி குறைவதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன், இவ்வருடம் வவுனியா மாவட்டத்தில் 13,500 ஏக்கர் அளவில் உழுந்துசெய்கை பண்ணப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஒரு கிலோகிராம் விதை உழுந்து 830 ரூபாய்க்கு கொளவனவு செய்து, 850 ரூபாய்க்கு விவசாயிகளிற்கு வழங்குவதாக விவசாய திணைக்கள அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.
உழுந்து பயிர்செய்க்கைக்கு காப்புறுதி திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதாக, சம்பந்தப்பட்ட அமைச்சரால் உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், உற்பத்தி செய்யும் உழுந்துக்கான விலையை சரியான முறையில் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படுமென, ஆளுநரால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், வவுனியா ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுவதற்கு முன்னதாக ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கு. திலீபன் மாவீரன் பண்டாரவன்னியனியனின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago