2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

ஊடகவியலாளரை மிரட்டிய உயரதிகாரி

George   / 2017 மே 15 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

வவுனியா மாவட்ட  அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பித்த நிலையில், செய்தி சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர் ஒருவரை அக் கூட்டத்தில் இருந்த மாவட்ட செயலக அதிகாரி ஒருவர் அச்சுறுத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டமானது வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான் ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, அங்கு செய்தி சேகரிப்பு பணியில் ஈடுபட்ட ஊடகவியலாளர் ஒருவரின் நெஞ்சைப் பிடித்து தள்ளி அவரை கூட்டம் நடைபெற்ற மண்டபத்தில் இருந்து வெளியேற்ற முற்பட்டார்.  

அதன்போது அங்கு நின்ற ஏனைய ஊடகவியலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அவர் அதிலிருந்து விலகிச் சென்றுள்ளார்.

இதேவேளை, இவர் அண்மையில் வவுனியா, நொச்சிமோட்டைப் பகுதியில் நெல்மூடைகளை திருடிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன், மாவட்ட செயலகத்தில் உயர் பதவி வகிப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .