2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல்

Niroshini   / 2021 செப்டெம்பர் 26 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட், க. அகரன்

 

மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பண்டிவிருச்சான் பகுதியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது நேற்று (25) இரவு, இனந்தெரியாத குழுவொன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோவில்மோட்டை காணி தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில், நேற்று  (25) விவசாய காணிகளை உழவு செய்ய முற்பட்ட போது, கோவில்மோட்டை விவசாயிகளுக்கும் அருட்தந்தை உள்ளடங்களான குழுவினருக்கும் இடையில்  முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில், குறித்த பகுதியைச் சேர்ந்த ஊடகவியலாளர் அறிக்கையிட்டதுடன், குறித்த சம்பவம் தொடர்பாக உரிய  நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு குறித்த அருட்தந்தையிடம் கோரியுள்ளார்.

எனினும் குறித்த அருட்தந்தை விளக்கம் கொடுக்க மறுத்துள்ளார். இந்த நிலையில், குறித்த ஊடகவியலாளர் நேரடியாக சம்பவ இடத்தில் இருந்து சேகரித்த  தகவலின் அடிப்படையில், குறித்த செய்தியை ஊடகங்கள் ஊடாக வெளியிட்டார்.

இது தொடர்பான செய்தி வெளியாகிய நிலையில், கோவில்மோட்டை விவசாயிகளுடன் தர்க்கத்தில் ஈடுபட்ட அப்பகுதி அருட்தந்தை, தொலைபேசி ஊடாக குறித்த ஊடகவியலாளரை அச்சுறுத்தும் விதமாக பேசியதுடன், தான் யார் என்பதை காட்டுகிறேன் என்று அச்சுறுத்தியுள்ளார்.

அதனுடன் நிறுத்தாமல், நேற்று முன்தினம் இரவு, குறித்த ஊடகவியலாளர் வீட்டின் மீது, இனந்தெரியாத குழுவினர் கற்களை வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த விடயத்தை அறிந்த அப்பகுதி மக்கள், ஒன்றுதிரண்டதை அடுத்து, அக்குழுவினர் தப்பிச்சென்று, அப்பகுதியில் இருந்து தலைமறைவாகி உள்ளனர்.

இது தொடர்பில் மடு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X