2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

ஊடகவியலாளர்களின் கடமைக்கு இடையூறு

Niroshini   / 2021 ஜூலை 15 , பி.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு - கேப்பாப்புலவு விமானப்படைத்தளத் தனிமைப்படுத்தல் நிலையத்தில், தனிமைப்படுத்தலிலுள்ள இலங்கை ஆசிரியர்சங்கச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களுக்கு உலர் உணவுப்பொருள்களை வழங்குவதற்காக இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் ரியந்த பெர்ணாள்டோ தலைமையில், இலங்கை ஆசிரியர் சங்க வடமத்திய மாகாண இணைப்பாளர் ஜே.எம்.மில்லியாஸ், இலங்கை ஆசிரியர் சங்க வவுனியா மாவட்ட தலைவர் பாஸ்கரமூர்த்தி நேசராஜா உள்ளிட்ட குழுவினர், இன்று (15) கேப்பாப்புலவு விமானப்படைத் தளத்துக்கு வருகைதந்திருந்தனர்.

இந்நிலையில் அங்கு செய்தி அறிக்கையிடலுக்காகச் சென்ற ஊடகவியலாளர்கள், அங்கிருந்த புலனாய்வாளர்களின் செயற்பாடுகளால் செய்தி சேகரிப்பதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

குறிப்பாக  ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருக்கும்போது அவர்களைச் சூழ்ந்து பாரிய அளவில் புலனாய்வாளர்களும் தமது அலைபேசிகள் மூலம் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் எடுத்துள்ளனர்.

இதனால் ஊடகவியலாளர்களின் செய்தி சேகரிப்புக்கு பாரிய இடையுறு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X