Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 03 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வடக்கில் எ9 வீதியை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் சோதனை நடவடிக்கைகளால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்திக்கின்றனர்.
குறிப்பாக ஆணையிறவு, மாங்குளம்,புளியங்குளம் ,ஓமந்தை ஆகிய பகுதிகளில் இராணுவ சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு பஸ்கள் சோதனைசெய்யப்பட்டு வருகிறன.
பயணிகள் பஸ்களே முழுமையாக சோதனையிடப்படுவதுடன், கடந்த ஒரு வாரகாலமாக போர்காலத்துடன் ஒப்பிடும் வகையில் பஸ்களில் செல்லும் பயணிகள் முழுமையாக இறக்கிவிடப்பட்டு அவர்களது பயணப்பொதிகள் சோதனையிடப்படுகின்றன.
இதனால், பல்வேறு இடஞ்சல்களுக்கு மத்தியில் பொதுமக்கள் தமது பயணத்தை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றனர்.
வன்னி பகுதியில் மாங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிக்கு அடுத்தபடியாக புதூர்சந்தியில் 15கிலோமீற்றர் இடைவெளியில் மற்றொரு சோதனைசாவடியும் அமைக்கப்பட்டுள்ளது.
அதற்கு அடுத்ததாக 15கிலோமீற்றர் தூர இடைவெளியில் ஓமந்தையிலும் ஒரு சோதனை சாவடி அமைக்கப்பட்டு பொதுமக்கள் இறக்கிவிடப்பட்டு வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டு அவர்களது பைகள் சோதனை மேற்கொள்ளபட்ட பின்னர் ஏற்றப்படுகின்றனர்.
குறித்த நடவடிக்கையால் ஒரு சோதனை சாவடியில் 15 நிமிடத்திற்கும் அதிகமான தாமதம் ஏற்படுகின்றது.
கடமையில் இருக்கும் இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் நிலையில் அதிகமான பஸ்கள் வருகை தரும்போது நீண்டநேரம் எடுப்பதுடன் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகின்றது.
குறித்த சோதனைகளின் மூலம் சில பஸ்களில் இருந்து கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் முறியடிக்கபட்டுவந்தாலும், பொதுமக்களை கடுமையாக அசௌகரியப்படுத்துவதாக பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
17 May 2025
17 May 2025