Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 ஜூலை 13 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
ஜனநாயக இடதுசாரி முன்னணியின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில், தாங்கள் இருவரும் அக்கட்சியில் இருந்து வெளியேறிக் கொள்வதாகத் தெரிவித்த ஜனநாயக இடதுசாரி முன்னணி கட்சி சார்பாக மன்னார் மாவட்ட வேட்பாளர்களாக போட்டியிடுகின்ற நிகேதன் மற்றும் விக்னராஜா, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின்போது, தங்களுக்கு யாரும் வாக்களிக்க வேண்டாமெனவும் கோரினர்.
மன்னாரில், நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர்கள், ஜனநாயக இடதுசாரி முன்னணியின் கொள்கைகளும் கோட்பாடுகளும், ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில், தாங்கள் இருவரும் அந்தக் கட்சியில் இருந்து வெளியேறுகின்றோமெனத் தெரிவித்தனர்.
எனவே, தங்களுக்கு வாக்களிக்க நினைக்கின்ற தமிழ்ச் சொந்தங்கள், தங்களுடைய விருப்பு இலக்கங்களுக்கு வாக்களிக்கக் கூடாதெனக் கோரிய அவர்கள், தங்களுடைய இலக்கங்களைப் புறக்கணித்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டனர்.
அத்துடன், எதிர்வரும் காலங்களில், மக்களின் நலனுக்காகத்தான் தாங்கள் இந்தக் கட்சியோடு இணைந்ததாகவும் இக்கட்சிக்குள் துழைந்ததும், இவர்களால் தங்களுக்கும் மக்களுக்கும் சரியான ஒரு தீர்வு கிடைக்கும் என்ற உறுதியான முடிவு கிடைக்கவில்லையெனவும், அவர்கள் தெரிவித்தனர்.
இந்தக் கட்சியுடன் பயணிக்கின்ற தாங்களும் ஏமாற்றுவாளிகளாக மாறிவிடக் கூடாது என்ற ஒரு காரணத்தால், இக்கட்சியிலிருந்து விலகிக் கொள்வதோடு, தேர்தலில் இருந்தும் ஒதுங்கிக்கொள்வதாகவும், அவர்கள் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
8 hours ago