Freelancer / 2023 பெப்ரவரி 02 , பி.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் நிருபர்
நாட்டில் மக்கள் பல விதங்களிலும் பாதிக்கப்பட்டுள்ள போதும் பல மில்லியன் ரூபாய் செலவு செய்து இந்த நாட்டின் சுதந்திர தின நிகழ்வுகள் கொண்டாட வேண்டுமா என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் ஒன்றிய தலைவி மனுவல் உதயசந்திரா தெரிவித்தார்.
மன்னாரில் நேற்று (02) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது:
சுதந்திரம் இல்லாத இந்த நாட்டுக்கு சுதந்திர தினம் தேவையா? இந்த நாட்டில் மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் நிலையில், பல குடும்பங்கள் வாழ்வாதாரம் இன்றி, துன்பங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
மீனவர்கள் தொழிலுக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர். விவசாயிகள் வீதிக்கு வரும் நிலையில் உள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாங்கள், வீதியில் இறங்கி, பல வருடங்களாக போராடி வருகிறோம். தமிழர்களாக இருந்தாலும் சிங்களவர்களாக இருந்தாலும் இந்த நாட்டில் மக்கள் பலவித பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இவ்வாறான சூழ்நிலையில், யாருக்காக இவ்வளவு மில்லியன் ரூபாய் நிதி செலவு செய்து, இந்தச் சுதந்திர தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று மேலும் தெரிவித்தார். R
34 minute ago
46 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
46 minute ago
53 minute ago