2025 மே 10, சனிக்கிழமை

‘எமது தந்தையையும் விடுதலை செய்யுங்கள்’

Editorial   / 2021 ஜூன் 27 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் இருவரும், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவை, இன்று (27) சந்தித்தனர்.

வடமராட்சியின் முள்ளி பகுதியில் இடம்பெற்ற சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை திறப்பு விழாவிற்கு வந்தபோதே நாமல் ராஜபக்‌ஷவை ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது தமது தந்தையை விடுதலை செய்யுமாறு, ஆனந்த சுதாகரின்  மகன் கவிரதன், மகள் சங்கீதா ஆகியோர் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

அதேவேளை, அரசியல் கைதிகளின் உறவுகளும் அண்மையில் விடுதலையான அரசியல் கைதிகளும் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X